திருப்பூர் மாவட்டம், அய்யம்பாளையத்தில் முறையாக மின்சாரம் வழங்க கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அய்யம்பாளையம் ஸ்ரீநகர் பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் காலை நேரத்தில் அதிகளவிலான மின்வெட்டுகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இது பல முறை மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அய்யம்பாளையம் ஸ்ரீநகர் பகுதி குடியிருப்புவாசிகள், தங்கள் கழுத்தில் கோரிக்கை பதாகைகளை மாலை போல அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















