சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டியில் பாஜகவினர் சார்பில் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 100-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சிக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த வகையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 280 பயனாளிகளுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு உத்தரவுக்கான நகல் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு அதிகாரிகள், பாஜகவினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
















