அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மார்கழி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
தமிழக, கேரள எல்லையான அச்சன்கோயிலில் தர்மசாஸ்தா ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. கோயிலில் மார்கழி மகோத்சவ திருவிழா கடந்த 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அப்போது தேரின் முன்பாக கருப்பன் துள்ளல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
















