திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வெள்ளியம்பாளையம் அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளை சிறைபிடித்து அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வெள்ளியம்பாளையம் பகுதியில் கைவிடப்பட்ட பாறை குழியில் குப்பைகளை கொட்ட வந்த 10 மாநகராட்சி லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
இதனை அறிந்த அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் குப்பைகளை லாரிகளை சிறைபிடித்து பொதுமக்களுடன் இணைந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து பாஜக நிர்வாகிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த திமுக பொறுப்பாளர் தோப்பு வெங்கடாசலம் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை லாரிகளை திருப்பி அனுப்பி வைத்தார்.
















