மத்திய அரசு Natgrit மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தரவு தளத்தை இணைத்து, 119 கோடி பேரின் விவரங்களை புலனாய்வு அமைப்புகள் எளிதில் அணுக முடியும் என அறிவித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர்.
இதில், அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி என்பவர் மூலமாக மும்பை பகுதிகளின் வீடியோக்கள் பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பாதீவிரவாதிகளுக்குக் கிடைத்ததும், அதனை அடிப்படையாக வைத்தே அவர்கள் தாக்குதல் நடத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து, நாட்டு மக்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஓரிடத்தில் சேகரித்து வைத்து உரிய நேரத்தில் புலனாய்வு அமைப்புகளுக்கு வழங்க வகை செய்யும் நேட் கிரிட் (Natgrit) எனப்படும் தேசிய உளவு தகவல் சேகரிப்பு மையம் என்ற அமைப்பை உருவாக்கியது.
இது கடந்த ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில் என்.பி.ஆர்.
எனப்படும் தேசிய மக்கள்தொகை பதிவேடு தரவு தளத்துடன் தேசிய உளவு தகவல் சேகரிப்பு மையம் இணைக்கப்பட்டுள்ளதால் 119 கோடி பேரின் விவரங்களை புலனாய்வு அமைப்புகள் எளிதில் அணுக முடியும்
















