சபரிமலை யாத்திரை முடிந்து வீடு திரும்பிய ஐயப்ப பக்தர்களின் பேருந்து, ஆந்திராவில் விபத்துக்குள்ளானது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலை யாத்திரையை முடித்துக் கொண்டு மினி பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அண்ணாமய்யா மாவட்டம், சம்பேபள்ளி அருகே பேருந்து எதிர்பாராதவிதமாகச் சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி, நடுரோட்டில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த 15 பக்தர்களும் உடனடியாக மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது உறக்க நிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
















