நெல்லையில் மதுவிருந்தில் பங்கேற்ற காவலர் ஒருவர் போதையில் தனது உறவினரின் காதை அறுத்துவிட்டு தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணியாற்றி வரும் டைசன் துரை என்பவர், கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவதற்காக தனது உறவினர் மெர்லின் மற்றும் நண்பர்களோடு மது அருந்திக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்தவர்களிடம் டைசன் துரை சாதி குறித்து கேள்வி எழுப்பியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவலர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மெர்லினின் காதை வெட்டிவிட்டு தப்பியோடினார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய டைசன் துரையை தனிப்படை அமைத்துத் தேடி வருகின்றனர்.
















