ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்தைப் பூட்டி, பேரூராட்சி மன்ற தலைவர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு பேரூராட்சியை அமமுக கைப்பற்றியதால், அக்கட்சியைச் சேர்ந்த மா.சேகர் பேரூராட்சி தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார்.
அண்மையில், அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த மா.சேகர் மாவட்ட செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் பேரூராட்சிக்குரிய நிதி வழங்கவில்லை, கடந்த நான்கரை ஆண்டுகளாக எந்த ஒரு பணிகளும் செயல்படவில்லை எனக்கூறி பேரூராட்சி மன்ற தலைவர் மா.சேகர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரத்தநாடு பேரூராட்சி அலுவலகத்திற்கு பூட்டு போட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
















