திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சுமார் 8 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் போராடி மீட்டனர்.
மணப்பாறை அருகே உள்ள காவல்காரன்பட்டியில் செல்வராஜ் என்பவர், தனக்கு சொந்தமான தோட்டத்தில் முட்புதர்களை தீயிட்டு கொளுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது புதருக்கடியில் மலைப்பாம்பு ஒன்று படுத்திருந்ததை கண்ட விவசாய பணியாளர்கள், மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் சுமார் 8 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
















