ஆந்திராவில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பதியில் இருந்து ஹைதராபாத் நோக்கிச் சென்ற கார், நந்தியால் மாவட்டம் நல்லகட்லா அருகே விபத்தில் சிக்கியது.
கார் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த பேருந்து மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















