தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் சங்கராந்தி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், புனரமைக்கப்பட்ட ஏரிகளைச் சுற்றி பிரம்மாண்டமான பட்டம் விடும் திருவிழாவை நடத்த அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
வரும் ஆண்டில், சங்கராந்தி திருவிழா ஜனவரி 11, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
நீர்நிலைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பட்டம் விடும் திருவிழா நடத்த திட்டமிட்ட முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஐடி ஊழியர்களை கவரும் வகையில் சிறப்புப் போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திரைப் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
















