அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் வரும் காலங்களில் இன்னும் அதிக வீரியத்துடன் தொடரும் எனப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
2025ல் வரிச்சலுகை தொடர்பாகச் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, கடந்த 11 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், மத்திய அரசு திட்டங்களின் பலன்கள் எவ்வித பாகுபாடும் அல்லாமல் அனைவரையும் சென்றடைந்துள்ளது எனவும், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வரிச்சலுகையால் நடுத்தர குடும்பங்கள் அதிக பணத்தை சேமிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தீபாவளி விற்பனை இதன்மூலம் அதிகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
















