அறிவியலுக்கும், தர்மத்திற்கு இடையே எந்த முரண்பாடும் இல்லை என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சுவாமி தரிசனம் செய்தார்.
பிறகு அங்கு நடைபெற்ற பாரதிய விஞ்ஞான் சம்மேளன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், அறிவியலுக்கும், தர்மத்திற்கும் இடையிலான வித்தியாசம் வழிமுறைகளில் மட்டுமே உள்ளதாகவும், இரண்டும் ஒரே இலக்கை நோக்கியே பயணிப்பதாகவும் தெரிவித்தார்.
மற்றபடி, அறிவியலுக்கும், தர்மத்திற்கும் எந்த வித்தியாசமும் இல்லை எனக்கூறிய அவர், அறிவியலால்தான் மனிதகுலத்திற்கு வசதிகளை வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.
















