தரங்கம்பாடி டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்தில் இருந்த 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று பொக்கிஷமான போர்வாள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டென்மார்க் நாட்டினரால் கடந்த 1620ஆம் ஆண்டு கட்டப்பட்ட டேனிஷ் கோட்டை தற்போது தொல்லியல் துறையின் சார்பில் அருங்காட்சியமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க போர் வாள்கள், நினைவுச் சின்னங்கள், பீரங்கிகள் என பல வகையான வரலாற்று பொக்கிஷங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கண்ணாடி பெட்டியில் இருந்த 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த போர் வாள் ஒன்றைக் காணவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
டிசம்பர் 24ஆம் தேதி மாலையில் அனைத்து பொருட்களும் பாதுகாப்பாக இருந்த நிலையில் மறுநாள் வந்து பார்க்கும் பொழுது கண்ணாடி பெட்டியில் இருந்த இரண்டு போர்வாள்களில் ஒரு போர்வாளை காணவில்லை எனக் கூறப்படுகிறது.
டேனிஷ் கோட்டை இளநிலை உதவியாளர் தினேஷ்குமார், பொறையார் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
















