குற்றங்களுக்கு எதிராக 360 டிகிரி தாக்குதல் நடத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரித்துள்ளார்.
டெல்லியில் பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பூஜ்ஜிய பயங்கரவாத கொள்கையின் அடிப்படையிலேயே இந்த மாநாடு தொடங்கப்பட்டுள்ளதாகவும், முன்பே திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிராக 360 டிகிரி தாக்குதல் நடத்த புதிய திட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய முகமைகளும், மாநில காவல்துறையும் தங்கள் மட்டத்தில் உள்ள தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தி வருவதாக தெரிவித்த அமித்ஷா, என்ஐஏ மற்றும் சிபிஐ வழிகாட்டுதல்களின்படி காவல்துறை இயக்குநர்கள் முழு ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
















