ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகியோருக்கு கூட்டம் வருவதைப் போன்றுதான், தவெக தலைவர் விஜய்-க்கும் கூட்டம் வருவதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெற்ற கபடி போட்டியை பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் சரத்குமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் திட்டங்களை நிறைவேற்றினால் தமிழகம் சிறப்பாக இருக்கும் எனவும், ஆனால் அதனை நிறைவேற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பதாகவும் தெரிவித்தார்.
திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
















