டெஸ்ட் கிரிக்கெட்களில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர்களின் வரிசையில் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முன்னேறினார்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர்களின் பட்டியலில் ராகுல் டிராவிட் 210 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தார்.
தற்போது 212 கேட்ச்களை பிடித்ததன் மூலம் ஸ்டீவ் ஸ்மித் ராகுல் டிராவிட்டை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார். இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 214 கேட்ச்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
















