மதுரையில் விநாயகர் நகர் பகுதியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட புதிய ஆதார் சேவை மையம் திறக்கப்பட்டது.
மதுரை கே.கே.நகரில் செயல்பட்டு வந்த ஆதார் சேவை மையத்தில் புதிய ஆதார் பதிவு, பெயர் திருத்தம், முகவரி மாற்றம் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இதற்காக வருகை தரும் மக்கள், பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், நவீன வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட புதிய ஆதார் சேவை மையமானது விநாயகர் நகர் பகுதியில் திறக்கப்பட்டது. இதனை இந்திய தனித்துவ அடையாள ஆணைய அதிகாரி பவன்குமார் திறந்து வைத்தார்.
















