தொடர் விடுமுறையால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். ஆண்டிற்கு இரண்டு சுற்றுலா சீசன் கொண்ட கன்னியாகுமரியில் தற்போது சபரிமலை ஐயப்ப பக்தர்கள் சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
அதேபோல் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படும். அந்த வகையில் தொடர் விடுமுறையை கொண்டாடும் விதமாகக் கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கடந்த 3 நாட்களில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை மற்றும் கண்ணாடி பாலத்தை 50 ஆயிரம் பேர் பார்வையிட்டதாகப் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
















