சென்னை சேப்பாக்கம் பகுதியில் விபத்து தொடர்பான தகராறில் பாதிக்கப்பட்ட நபரைத் திமுக வட்டச் செயலாளர் ஆபாசமாகப் பேசி மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திமுக வட்டச் செயலாளர் பிரபாகரன் என்பவருக்குத் தெரிந்த நபர் ஒருவர் அப்பகுதியில் விபத்து ஏற்படுத்தியாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், காவல்துறையினர் வருவதற்கு முன்பு சம்பவ இடத்திற்கு சென்ற பிரபாகரன், தனது அரசியல் அதிகாரத்தை முன்வைத்து எதிர்தரப்பைச் சேர்ந்த நபரை ஆபாசமான வார்த்தைகளால் பேசி மிரட்டியுள்ளார்.
இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்களை பாதுகாக்க வேண்டிய அரசியல் நிர்வாகிகளே, அச்சுறுத்தலுக்கான காரணமாக மாறுவது, ஆட்சியாளர்களின் பொறுப்பின்மையை வெளிப்படுத்துவதாக விமர்சனம் எழுந்துள்ளது.
















