கோவை மாவட்டம் ஆனைமலையில் கிராம தங்கல் திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கான பல்வேறு விழிப்புணர்வு விளக்கங்களை செய்து காண்பித்தனர்.
விவசாய தொழில் நடைபெற்று வரும் இடத்தில் தங்கிய கல்லூரி மாணவிகள், மண்ணின் தன்மை, விவசாயத்தில் எளிமையாக லாபம் ஈட்டுவது, மண்புழு பயன்பாடு, விவசாயத்தில் புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடிய வேளான் கல்லூரி மாணவிகள், எளிய முறையில் உரங்களை தயாரிப்பது குறித்து செய்து காண்பித்தனர்.
















