திருமலைக்கு நடைபயணமாக வரும் பக்தர்களுக்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஒரு புதிய மற்றும் ஆன்மீகச் சிறப்பம்சத்தைத் தொடங்கியுள்ளது.
திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து அலிபிரி நடைபாதை வழியாகத் திருமலைக்கு பாதயாத்திரையாகப் பக்தர்கள் செல்வது வழக்கம்.
இந்நிலையில், திருமலை மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்கள், ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்னதாகப் பசுக்களுக்குப் பூஜை செய்து, அவற்றை வலம் வரும் வசதியைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது.
சனாதன தர்மத்தின்படி பசுவை வழிபடுவது அனைத்து தெய்வங்களையும் வழிபட்டதற்கு சமம் என்பதால், பக்தர்களிடையே இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று பக்தியுடன் பசுக்களுக்குப் பழங்கள் மற்றும் அகத்திக்கீரைகளை வழங்கி வலம் வந்து தரிசனம் செய்தனர்.
















