சென்னை மாதவரம் அருகே சாலையில் தவறி விழுந்த பெண் மீது தண்ணீர் லாரி மோதிய காட்சி வெளியாகி உள்ளது.
மாதவரத்தை சேர்ந்த சரளா என்பவர், அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவீட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் கல் தடுக்கி கீழே விழுந்தார். அச்சமயத்தில் அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி சக்கரத்தில் சரளா சிக்கினார்.
இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
















