சொத்துவரி பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணங்களை ஒரே மாதிரியாக நிர்ணயித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியிருப்பு பயன்பாடுகளுக்கான சொத்து வரி பெயர் மாற்ற 500 ரூபாய், பிற பயன்பாடுகளுக்கு ஆயிரம் ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஏற்பக் கட்டணங்கள் மாறுபட்ட நிலையில், தற்போது அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















