புகழ்பெற்ற வங்கதேச ராக் இசைக்கலைஞர் ஜேம்ஸின் 185வது ஆண்டு விழா இசை நிகழ்ச்சி, இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டதில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ஜேம்ஸ் என்ற பெயரில் அறியப்படும் புகழ்பெற்ற வங்கதேச ராக் இசைக்கலைஞரான ஃபாரூக் மஹ்பூஸ் அனாம், அந்நாட்டின் ராக் இசையின் குரு என்று கொண்டாடப் படுகிறார். தனது ராக் பாடல்கள் மூலம், தேசத்தின் இசை அடையாளத்தை மீட்டெடுப்பதிலும் தேசிய உணர்வை ஊட்டுவதிலும் ஃபாரூக் முக்கிய பங்காற்றி வருகிறார். 1970-களின் பிற்பகுதியில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கியதிலிருந்து, நாட்டுப்புற இசையின் ஆன்மீக சாரத்துடன் ஹார்ட் ராக் இசையைக் கலந்து, அனைவரையும் கவரும் வகையில் ஒரு இசைக்கலைஞராகப் பாடகராக விளங்கி வருகிறார்.
‘ஸ்டேஷன் ரோடு’ மற்றும் ‘ஜெயில் தேகே போல்ச்சி’ உட்பட அவரது பல பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றன. முதலில் ஃபீலிங்ஸ் என்று அழைக்கப்பட்ட நகர் பவுல் இசைக்குழுவின் முன்னணிப் பாடகரான ஜேம்ஸ், தெற்காசிய இசைஉலகத்தின் பீகி பீகி” மற்றும் அல்விதா போன்ற திரைப்படப் பாடல்கள் மூலம் இந்தியாவிலும் ஒரு பிரபல பாடகராக, எல்லை தாண்டிய செல்வாக்கு மிக்க கலாச்சாரத் தூதுவராகவும் ஜேம்ஸ் அறியப் படுகிறார்.
இந்நிலையில், வங்கதேசத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஃபரித்பூர் ஜிலா பள்ளியின் 185வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவாக ஜேம்ஸின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் ஜேம்ஸ் மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென நுழைந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள், மேடையை நோக்கி செங்கற்களையும் கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் பள்ளி மாணவர்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். நூலிழையில் ஜேம்ஸ் உயிர் தப்பிய நிலையில், இசைக்குழு உறுப்பினர்களுக்கும் மற்ற கலைஞர்களும் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுள்ளனர். இசை நிகழ்ச்சிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் முடித்திருந்ததாகவும், திடீர் வன்முறை தாக்குதல்களால் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஆண்டுவிழா நிகழ்ச்சியின் விளம்பரம் மற்றும் ஊடகத் துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரஜிபுல் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.
ஃபரித்பூர் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் முஸ்தஃபிசுர் ரஹ்மான் ஷமீம் அறிவித்துள்ளார். அப்பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்க்ஷ பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையிலும் இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சி வீழ்ச்சியடைந்ததில் இருந்தே, வங்கதேசத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இசை உடற்பயிற்சி ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்த இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களுக்குப் பயந்து அந்தத் திட்டத்தை முகமது யூனுஸ் அரசு ரத்து செய்துள்ளது.
தொடர்ந்து இசை மற்றும் கலாச்சார விழாக்களை நடத்தவிடாமல் தடுத்து வருகின்றன. இசைக்கலைஞர்கள் தாக்கப்படுவதும், கலாச்சார நிறுவனங்கள் அழிக்கப்படுவதும் வங்கதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புகளிடமிருந்து நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது என்றாலும், முகமது யூனுஸின் இடைக்கால அரசு இசை கலாச்சாரத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இசைக்கலைஞர்கள் கூறுகின்றனர்.
















