ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ராணுவ தளபதி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது உக்ரைன்.
மாஸ்கோவில் அண்மையில் நடந்த கார் குண்டுவெடிப்பில் ராணுவ தளபதி பனில் சர்வரோவ் உள்பட மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் லெப்டினென்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றிருந்தது.
இந்த நிலையில், இந்தத் தாக்குதலையும் உக்ரைன் நடத்தியிருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தற்போது இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.
இலக்கு வைக்கப்பட்ட அதிகாரி, உக்ரைன் மீதான படையெடுப்பில் முனைப்பு காட்டியவர் என்றும், உக்ரேனிய போர்க்கைதிகளை சித்ரவதை செய்தவர் என்றும் கூறியுள்ளது.
















