2025ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள், சவுதி அரேபியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
விசா அனுமதி காலத்தை மீறித் தங்குதல், உரிய ஆவணம் இன்றி தங்கியவர்கள் போலீசாரிடம் பிடிபட்டவுடன் நாடு கடத்தப்படுகிறார்கள்.
அந்த வகையில் இந்தாண்டு சவுதி அரேபியாவிலிருந்து 11 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு நாடுக்கு கடத்தப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் இரண்டாவதாக அமெரிக்காவிலிருந்து 3 ஆயிரத்து 800 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















