அரசியல் வரலாற்றில் கேப்டன் என்றால் அது விஜயகாந்த் மட்டும் தான் எனவும் அவரின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் ஓங்கி நிற்கும் எனவும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்,
அரசியல் வரலாற்றில் கேப்டன் என்ற பெயர் விஜயகாந்திற்கு மட்டும் தான் பொருந்தும் என்றும் தனக்கென தனி முத்திரை பதித்த தலைவர்களில் விஜய்காந்தும் ஒருவர் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார்.
விஜயகாந்தின் மறைவு அனைத்து தரப்பினருக்குமே ஒரு பெரும் இழப்பு என்றும் விஜயகாந்த் பழகும் விதம், பகிர்ந்த கருத்துகள் என்றென்றும் நினைவில் இருக்கிறது என்றும் விஜயகாந்தின் புகழ் மக்கள் மனதில் என்றைக்கும் ஓங்கி நிற்கும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.
















