நவீன உலகில் ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் நாடுகள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்த ஆய்வின் படி, ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் முதலிடத்தில் இருப்பது சீனா. அங்கு டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி, சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் மற்றும் வேலை சார்ந்த பயன்பாடுகள் காரணமாக மக்கள் தொடர்ந்து மொபைல் திரையில் மூழ்கி இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
இரண்டாவது இடத்தில் சவுதி அரேபியா உள்ளது. மூன்றாவது இடத்தில் மலேசியாவும், நான்காவது இடத்தில் பிரேசிலும், ஐந்தாவது இடத்தில் தென் கொரியாவும், 17-வது இடத்தில் இந்தியாவும் உள்ளது.
















