பொங்கல் விடுமுறையன்று நடைபெறவிருந்த சிஏ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நாளில் இந்தியப் பட்டய கணக்காளர் கழகம் சார்பாக ஜனவரி 15-ம் தேதி பொங்கலன்று தேர்வு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.
இது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு கிளம்பிய சூழலில், ஜனவரி 15ஆம் தேதி நடக்கவிருந்த சிஏ இண்டர்மீடியர் தேர்வு, ஜனவரி 19ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
















