சென்னை மயிலாப்பூரில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்த வனிதா என்பவரை கடந்த 24ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வனிதா அளித்த தகவலின்படி, அவரது கணவர் அப்துல்லா, மணிகண்டன் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையிலடைத்தனர்.
















