திருத்தணியில் வடமாநில இளைஞரை 4 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி ரயில் நிலையத்திற்கு வெளியே வடமாநில இளைஞர் நின்றுகொண்டிருந்தார். அப்போது, போதையில் அங்குவந்த 4 மர்ம நபர்கள், இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த இளைஞர் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இளைஞரை வெட்டிவிட்டு தப்பிய 4 பேர் கொண்ட நாக்பூரைச் சேர்ந்தவர்கள் என்பதும், போதையில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்மந்தப்பட்ட 4 பேரையும் தேடி வருகின்றனர்.
















