பீகாரில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ஜமுய் மாவட்டத்தில் கிழக்கு ரயில்வேயின் ஆசன்சோல் கோட்டத்திற்கு உட்பட்ட லஹாபோன் மற்றும் சிமுல்தலா ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது 8 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டன. இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக ஹவுரா-பாட்னா-டெல்லி வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
















