கோவையில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி, கணவன் கண்முன்னே மனைவி தலைநசுங்கி உயிரிழந்த சம்பவத்தின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
கோவை மரக்கடை பகுதியை சேர்ந்த முகமது ரஃபீக் என்பவர், தனது மனைவி ராபியத்துல் பஷிரியாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சரிந்தது. அதே நேரத்தில் பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தின் பின்பக்க டயரில் ராபியத்துல் பஷிரியாவின் தலை சிக்கி நசுங்கியது.
இதில் ராபியத்துல் பஷிரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த முகமது ரஃபீக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், தனியார் பேருந்து ஓட்டுநர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
















