இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
புதிய விமானி மற்றும் பணியாளர்கள் பணி நேர விதிமுறைகளை அமல்படுத்துவது தொடர்பான திட்டமிடல் குறைபாடுகளால் இண்டிகோ நிறுவனத்தின் சேவையில் மிகப்பெரிய அளவிலான இடையூறுகள் ஏற்பட்டது.
இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில், இடையூறுகளுக்கான காரணம் குறித்து மத்திய அரசிடம் ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது.
















