ஸ்ரீஹரிகோட்டாவில் 3-வது ராக்கெட் ஏவுதளத்தை அமைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. இது 175 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது.
முதல் ஏவுதளம் 1990-களின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. இரண்டாவது ஏவுதளம் 2005-இல் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகளில் மூன்றாவது ஏவுதளத்தை உருவாக்கி, செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















