கன்னியாகுமரி அருகே கோயிலில் இருந்து சிலைகளை எடுத்து சென்ற அதிகாரிகளை கண்டித்து இந்து முன்னணி சார்பில் “மகா சண்டிகா யாகம்” நடைபெற்றது.
முடியம்பாறை பத்ரகாளி அம்மன் கோயிலில் உள்ள மூலவர் சிலையையும், மயிலாடும்பாறை மலை மீது உள்ள முருகன் சிலையையும் அதிகாரிகள் எடுத்து சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்துள்ளனர்.
அரசு நிலத்தில் கோயில் இருந்ததால் சிலைகளை எடுத்து சென்றதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்தநிலையில் இச்சிலைகளை மீண்டும் அதே இடத்தில் நிறுவ நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து கல்லு பாலம் இசக்கி அம்மன் கோயிலில் இந்து முன்னணி சாா்பில் மகா சண்டிகா யாகம் நடைபெற்றது.
இதில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, முடியம்பாறை பத்திரகாளி அம்மன் கோயிலில் தெளிக்க 11 போ் சென்றனா். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் இந்து முன்னணியினர் புனித நீரை கீழே ஊற்றினர். இருப்பினும் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
















