பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே ‘கன்ஹா ஷாந்தி வனம்’ பகுதியில் Vishwa Sangh Shibir நிகழ்ச்சி நடைபெற்றது. ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம், சனாதன தர்ம ஸ்வயம் சேவக சங்கம், ஹிந்து சேவா சங்கம், சேவா இன்டர்நேஷனல், சம்ஸ்கிருத பாரதி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 2000 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தர்மத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாரதம் விஸ்வகுருவாக உருவெடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், பாரதத்தின் எழுச்சி சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சி என்றும் கூறினார். விஸ்வகுருவாக ஆவது இந்தியாவின் லட்சியம் மட்டுமல்ல, உலகின் தேவை என்றும் மோகன் பகவத் கூறினார்.
















