ஆந்திர மாநிலம், அனகாப்பள்ளி அருகே ஓடும் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதில் விஜயவாடாவை சேர்ந்த பயணி ஒருவர் உடல் கருகி பலியானார்.
டாட்டா நகர் – எர்ணாகுளம் இடையேயான விரைவு ரயில் ஆந்திர மாநிலம் இளமஞ்சிலி அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பி-1 என்ற பெட்டியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் துரிதமாக செயல்பட்ட லோகோ பைலட் அந்த பெட்டியை தனியாக கழற்றி விட்டார். இருப்பினும் எம்-1 என்ற பெட்டிக்கும் தீ பரவியது. விபத்தின் தீவிரம் அறிந்த பயணிகள் ரயிலில் இருந்து குதித்து உயிர் தப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் இரண்டு பெட்டிகளிலும் தீயை அணைத்து ஆய்வு நடத்தினர்.
அப்போது விஜயவாடாவை சேர்ந்த சுந்தர் என்பவர் உடல் கருகி பலியாகிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
















