வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி கலிதா அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்குச் சிறப்பு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. அடுத்த ஆண்டு வங்கதேசத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், கலிதா ஜியாவின் உடல்நலப் பாதிப்பு அக்கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
















