உக்ரைன் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதை காண ரஷ்யா விரும்புவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள மார்-எ-லாகோ அரங்கில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முன்னதாக மார்-எ-லாகோ அரங்கிற்கு வந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அதிபர் டிரம்ப் கைகுலுக்கி வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் இருநாட்டு முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்ட நிலையில், ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த பல்வேறு விவகாரங்கள் அப்போது விவாதிக்கப்பட்டன.
















