காரைக்காலில் மதுபோதையில் சிலர் காவலரை சுற்றி வளைத்து மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்கால் மதகடி பகுதியில் குடியிருப்புக்கு அருகே சிலர் மது அருந்தி விட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற காவலர் ரகளையில் ஈடுபட்ட போதை நபர்களை எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த போதை நபர்கள் காவலரை சுற்றி வளைத்து மிரட்டியுள்ளனர். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















