நேபாளத்தில் முன்னாள் ராப் பாடகராக இருந்த பலேந்திர ஷா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடைகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றை எதிர்த்து ஜென் – ஸி தலைமுறையினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த செப்டம்பர் 8-ம் தேதி அந்நாட்டு அரசு இளைஞர்கள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து வெடித்த வன்முறையில் நேபாள அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், அந்நாட்டு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சுசீலா கார்கி இடைக்கால பிரதமராகப் பதவியேற்றார்.
அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காத்மாண்டு மாநகராட்சி மேயராக இருக்கும் பலேந்திர ஷா, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ராஷ்ட்ரிய ஸ்வதந்திரா கட்சியுடனான உடன்படிக்கையின்படி, பலேந்திர ஷாவின் குழுத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மணி சின்னத்தின் கீழ் தேர்தலில் போட்டியிடவுள்ளனர். பலேந்திர ஷா அந்த நாட்டின் முன்னாள் ராப் பாடகர் என்பது குறிப்பிடத்தக்கது
















