திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் விளையாட்டு திடல் அமைக்க வலியுறுத்தி விளையாட்டு வீரர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலரும் குத்துச்சண்டை, தடகளம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர்.
இவர்கள் தங்கள் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானத்தை அமைத்துத் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் பூவலம்பேடு பகுதியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிய விளையாட்டு திடல் அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த அவர்கள், கும்மிடிப்பூண்டி பகுதியில் விளையாட்டு திடலை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
















