ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பதுங்கு குழிக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு பாகிஸ்தான் ராணுவம் தன்னை அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், ஜர்தாரியின் மனைவியுமான பேநசீர் புட்டோ கடந்த 2007-ல் ராவல்பிண்டி நகரில் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தும் கொல்லப்பட்டார்.
அவரது நினைவு தின அனுசரிப்பு நிகழ்ச்சியில், அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய ஜர்தாரி, ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் தொடங்கிய பிறகு, தனது ராணுவத்துறை செயலர் பதுங்கு குழிக்குச் செல்லுமாறு கூறியதை நிராகரித்ததாகக் கூறினார்.
தலைவர்கள் பதுங்கு குழியில் உயிரிழக்க கூடாது எனவும், போர்க்களத்தில் தான் உயிரிழக்க வேண்டும் எனக் கூறியதாகவும் தெரிவித்தார்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் மூலம், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மற்றும் ராணுவத்தை இந்தியா நிலைகுலையச் செய்தது.
இருப்பினும் சர்வதேச சமூகத்தில் ஆபரேஷன் சிந்தூரால் நிகழ்ந்த சேதத்தை ஒப்புக் கொள்ளாமல் பாகிஸ்தான் கௌரவம் காட்டி வந்தது.
இந்நிலையில் அந்நாட்டு துணை பிரதமர் முதல் அதிபர் வரை ஒருவர் பின் ஒருவராக ஆபரேஷன் சிந்தூரால் அஞ்சி நடுங்கியதை பொதுவெளியில் கூறி வருவது இணையத்தில் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.
















