பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திய பகுதிநேர ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பகுதி நேர ஆசிரியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்படும் எனத் திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாகியும் அவர்களுக்கான அறிவிப்பைத் திமுக அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது.
இதனைக் கண்டித்த பகுதி நேர ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்த நிலையில் சிவானந்தா சாலையில் ஒன்று கூடிய பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அவர்கள் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றக் கோருகிறோம் எனவும், மிகவும் குறைவான ஊதியம் பெறும் தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
















