பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் தங்களது குடும்பத்துடன் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத் திறனாளிகள் ஆணையரக வளாகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் மாற்றுத்திறனாளி ஊழியர்களை அரசுப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசாணை 151ஐ எவ்வித நிபந்தனையுமின்றி நடைமுறைப்படுத்த வேண்டுமென என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதனிடையே தொகுப்பு ஊதிய பணியாளர் என்ற பெயரை நீக்கி, நிரந்தர பணியாளர் என மாற்ற வேண்டுமெனவும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் வலியுறுத்தினர்.
















