உத்திரபிரதேசம் மாநிலம் பஹாரி கேட் அருகே கனரக லாரி ஒன்று கார் மீது கவிழ்ந்த விபத்தில் அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
நைனிடால் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற அரசு அதிகாரி ஒருவர் சாலையோரமாகக் காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது குறுக்கே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த அதிகாரி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து காரணமாக நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தற்போது விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
















