தேசிய ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறும் நபர்கள் இனி 80% பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய ஓய்வூதிய திட்டத்தின் சந்தாதாரர்கள் தங்களின் முதலீட்டு நிதியை 60 விழுக்காடு மட்டுமே பெறும் நிலை இருந்து வந்தது.
ஆனால் அதனை 80 விழுக்காடாக உயர்த்தி ஆணையம் அறிவிப்பை வெளியிட்டதோடு பயனாளர்களின் 20% தொகையானது ஆயுள் கால ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.
















