நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் வசூலில் அசத்தி வருகிறது.
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர்.
பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம் பல உண்மைச் சம்பங்களையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
இப்படம் புஷ்பா 2 படத்தின் சாதனையை முறியடித்து, 24 நாட்களில் உலகளவில் இதுவரை ஆயிரத்து 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது.
















